×

பிரதமர் மோடி ஜப்பான் சென்றார்

டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ‌ஷின்சோ அபே நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டு சென்றார். முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே கடந்த ஜூலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். அபேயின் நினைவு நிகழ்ச்சி, அந்நாட்டு அரசு சார்பில் இன்று டோக்கியோவில் நடக்கிறது. இதில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், வியட்நாம் அதிபர் நுகுயென் சுவான் புக், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ், பிரதமர்  மோடி உள்பட 40 உலகத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக பிரதமர் மோடி நேற்று டோக்கியா புறப்பட்டு சென்றார். ஷின்சோவுக்கு அரசு சார்பில் நினைவு நிகழ்ச்சி நடத்துவதற்கு ஜப்பானில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிகழ்ச்சியை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி டோக்கியோவில் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது….

The post பிரதமர் மோடி ஜப்பான் சென்றார் appeared first on Dinakaran.

Tags : Modi ,Japan ,Tokyo ,Shinzo Abe ,Dinakaran ,
× RELATED 2 நாளில் ஆளை கொல்லும் ஜப்பானில் பரவும் தசையைத் தின்னும் பாக்டீரியா