×

விழுப்புரம் அருகே அண்ணா சிலை அவமதிப்பு வழக்கு: பாஜகவை சேர்ந்த 3 பேர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு, மர்ம நபர்கள் சிலர் செருப்பு மாலை அணிவித்து , ஆ.ராசா எம்.பி.யின் புகைப்படத்திற்கு கரும்புள்ளி குத்தி நபர்கள் அவமதிப்பு செய்தனர். இந்தநிலையில்,  அண்ணா சிலை அவமதிப்பு தொடர்பாக சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் அருகே கண்டமங்கலத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலையை அவமதித்திருப்பது கோழைத்தனமான செயல், இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், அமமுக-வின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது டுவிட்டரில் பதிவில், அமமுக விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச்சிலை அவமதிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமானவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த காரணத்திற்காகவும் மறைந்த தலைவர்களின் சிலைகளை அவமதிப்பதைத் தொடரவிடக்கூடாது என பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டிக்கும் விதமாக மர்ம நபர்களை கைது செய்யக்கோரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த சாலை மறியலால் புதுச்சேரி விழுப்புரம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் தொடர்புடைய ஆகாஷ், அப்பு , வீரமணி ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட யுவராஜ் , கணேஷ்,  கபில் ஆகிய மூன்று பேரையும் காவல்துறை தனிப்படை தீவிரமாக தேடி வருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் விழுப்புரம் நீதித்துறை நீதிமன்றத்தில் 2 நீதிபதி முன்பு  நள்ளிரவில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். …

The post விழுப்புரம் அருகே அண்ணா சிலை அவமதிப்பு வழக்கு: பாஜகவை சேர்ந்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Anna ,Villupuram ,BJP ,Anna idol ,Kandamangalam ,Villupuram district ,
× RELATED 2.5 கிலோ நகை அணிந்து வந்த கர்நாடக...