×

தியேட்டர் வாசலில் ரசிகர்களிடம் விமர்சனம் கேட்ட அக்‌ஷய் குமார்

மும்பை: பொதுவாக புது படம் ரிலீஸ் ஆனால் முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு வெளியில் வரும் ரசிகர்களிடம் விமர்சனம் கேட்கப்படும். அவர்கள் கூறும் விமர்சனத்தை கேட்க ரசிகர்களிடையே எதிர்பார்ப்பும் நிலவும்
இந்நிலையில், இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் தான் நடித்து வெளிவந்திருக்கும் படத்தின் விமர்சனத்தை நேராக தியேட்டருக்கே சென்று வாசலில் நின்று ரசிகர்களிடம் கேட்டிருக்கிறார். ஆனால் அவர் முகமூடி அணிந்து கொண்டு சென்றதால் மக்கள் யாருக்கும் அவரை அடையாளம் தெரியவில்லை.

அவர் நடித்திருக்கும் ஹவுஸ் ஃபுல் 5 இந்தி படத்தின் விமர்சனத்தை கேட்கத்தான் அக்ஷய் குமார் சென்று இருக்கிறார். அவர் கில்லர் மாஸ்க் அணிந்து கொண்டு விமர்சனம் கேட்டிருக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. அது அக்‌ஷய் குமார் எனத் தெரியாமல் பலரும் பதில் கூறாமல் செல்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே படத்தை பற்றி பேசுகிறார்கள். தியேட்டரிலிருந்து பலரும் சென்ற பிறகே அவர் அக்‌ஷய் குமார் என ஒரு சில ரசிகர்கள் மட்டும் தெரிந்துகொள்கிறார்கள்.

 

Tags : Akshay Kumar ,Mumbai ,
× RELATED ஜமா பாரி இளவழகன் ஜோடியாக ரம்யா ரங்கநாதன்