×

சினிமாவில் வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த ஆம்ஆத்மி நிர்வாகி கைது

வெராவல்: சினிமாவில் வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஆம்ஆத்மி நிர்வாகியை குஜராத் போலீசார் கைது செய்தனர். குஜராத் மாநிலம் வெராவல் பகுதியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி பாகு வாலா என்பவர் மீது 23 வயதான இளம்பெண் ஒருவர்,  கிர் சோம்நாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார் கொடுத்தார். அதையடுத்து பாகு வாலாவை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். இதுகுறித்து வெராவல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனில் இஸ்ரானி கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி நிர்வாகி பாகு வாலா, ‘விஷ்வா’ என்ற பெயரில் வீடியோ தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். விளம்பரம் மற்றும் சினிமா படங்களில் மாடலாக வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாக உறுதியளித்து சம்பந்தப்பட்ட பெண்ணிடம் கூறியுள்ளார்.தொடர்ந்து விளம்பர ஷூட்டிங் நடத்துவதற்காக அந்தப் ெபண்ணை வெளியூர்களுக்கு அழைத்து சென்றார். அங்கு அந்தப் பெண்ணிடம் அத்துமீறி நடத்து கொண்டதுடன், பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாகு வாலாவை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளோம். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்’ என்றார். கைதான பாகு வாலா, ஆம் ஆத்மி கட்சியில் இணைவதற்கு முன்பு, கிர் சோம்நாத் மாவட்ட நிர்வாகியாக காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. …

The post சினிமாவில் வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த ஆம்ஆத்மி நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : Verawal ,Gujarat ,
× RELATED போலி அரசு அலுவலகம் நடத்தி ₹21 கோடி...