×

பெங்களூருவில் பரபரப்பு பே சிஎம் போஸ்டர் ஒட்டிய காங்கிரஸ் தலைவர்கள் கைது

பெங்களூர்: பெங்களூருவில் ‘பே சிஎம்’ போஸ்டர் ஒட்டி பிரசாரம் செய்த கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜ அரசு, பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீதம் கமிஷன் வசூலிப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன், முதல்வர் பொம்மை புகைப்படத்துடன் ‘பே சிஎம், 40% கமிஷன் இங்கு ஏற்கப்படும்’ என்ற போஸ்டர், பெங்களூரு முழுவதும் ஒட்டப்பட்டதால் பரபரப்பு நிலவியது. அந்த போஸ்டரில் உள்ள கியூஆர் கோடை ஸ்கேன் செய்தால், ‘40% சர்க்கார்’ என்ற இணையதளத்துடன் லிங்க் செய்யப்பட்டிருந்தது. இந்த இணையதளம் சமீபத்தில் காங்கிரசால் உருவாக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டை முதல்வர் பொம்மை மறுத்து வரும் நிலையில், பெங்களூருவில் ‘பே சிஎம்’ போஸ்டர் ஒட்டும் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் நேற்று ஈடுபட்டனர். அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் ‘பே சிஎம்’ போஸ்டர் ஒட்டி பிரசாரத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி இப்பிரசாரம் நடத்தப்பட்டதால், உடனடியாக போலீசார் அங்கு வந்து டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை கைது செய்தனர்….

The post பெங்களூருவில் பரபரப்பு பே சிஎம் போஸ்டர் ஒட்டிய காங்கிரஸ் தலைவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Congress ,Stirring Bay ,CM ,Bangalore ,Karnataka ,D.C. K.K. Major ,Shivakumar ,Bengaluru ,
× RELATED நெல்லை காங்., தலைவர் ஜெயக்குமார் கொலை...