×

செங்கல்பட்டு அருகே ஏரியில் கவிழ்ந்த ராணுவ வாகனம்: உயிர் தப்பிய வீரர்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுரம் பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான துப்பாக்கி சுடும் பயிற்சி பள்ளி இயங்கி வருகின்றது. இந்நிலையில், ராணுவ குடிநீர்  லாரியில் அஞ்சூர் ஏரியில் தண்ணீர் எடுக்க ராணுவ வீரர்கள் அஞ்சூர் ஏரிக்கு சென்றனர். லாரியில் தண்ணீர் நிரப்பிய பின்பு, ஏரிக்கரை ஓரம் சென்ற லாரி, எதிர்ப்பாராதவிதமாக  ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டிரைவர் உட்பட மூன்று ராணுவ வீரர்கள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இவர்கள்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அஞ்சூர் ஏரிக்கரையில்  கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு போடப்பட்ட புதிய தார்சாலை தரமற்று போடப்பட்டுள்ளதால் ராணுவ குடிநீர் லாரி விபத்துக்குள்ளானது என ராணுவ வீரர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். அடுத்தடுத்து இதுபோன்ற பெரும் விபத்துக்கள் நடைபெறுவதற்கு முன்பே இந்த தரமற்ற தார் சாலையை அகற்றிவிட்டு தரமான புதிய சாலையை அமைக்க வேண்டும் சாலையின் இரு புறங்களிலும் மண் கொட்டி அணைக்கவேண்டும்  எனவும் தரமற்ற தார்சாலை அமைத்த அஞ்சூர் ஊராட்சி மன்ற தலைவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post செங்கல்பட்டு அருகே ஏரியில் கவிழ்ந்த ராணுவ வாகனம்: உயிர் தப்பிய வீரர்கள் appeared first on Dinakaran.

Tags : Army ,Chengalpattu ,Anumanthapuram ,Dinakaran ,
× RELATED மதுபோதை தகராறில் நண்பனை வெட்டி...