×

இன்ஜினியர் மீது தாக்குதல் சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது

ஆலந்தூர்: ஆதம்பாக்கம், சஞ்சய் காந்தி நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் அருண் (31), என்ஜினியர். இவர், நேற்று பரங்கிமலை ரயில் நிலையம் அருகே நடந்து சென்றபோது, எதிரே வந்த 4 பேர், அருணிடம் உங்க பர்ஸ் கீழே  விழுந்துவிட்டது. எடுத்துக்குங்க என கூறியுள்ளனர். அதற்கு அருண், அது எனது இல்லை என கூறிவிட்டு சென்றுள்ளார். இதில், கோபமடைந்த 4 பேரும், வீண் தகராறு செய்து அருணை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த அருண், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், இதுகுறித்து அவர் ஆதம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அதில், ஆதம்பாக்கம் கரிகாலன் தெருவை சேர்ந்த திவ்யன் (18), கிண்டி நேரு நகரை சேர்ந்த சரவணன்(18), மற்றும் 2 சிறுவர்கள் அருணை தாக்கியது தெரிய வந்தது. இதனையடுத்து  4 பேரையும் போலீசார் கைது செய்தனர்….

The post இன்ஜினியர் மீது தாக்குதல் சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Alandur ,Arun ,Sanjay Gandhi Nagar main Road, Adambakkam ,Parankimalai ,on Engineer ,Dinakaran ,
× RELATED ஆதம்பாக்கம் பகுதியில் குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க கோரிக்கை