×

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா

சென்னை, ஜூன் 2: புதிய படம் ஒன்றில், ‘பிச்சைக்காரன்’ படத்துக்கு பிறகு மீண்டும் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கிறார். அவரது தங்கை மகன் அஜய் திஷான் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார். சசி இயக்கிய ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்ற படத்தை தயாரித்த அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ் பி.பிள்ளை இப்படத்தை தயாரிக்கிறார். தமிழில் ரீ-என்ட்ரியாகி ‘லப்பர் பந்து’, ‘ரெட்ரோ’, ‘மாமன்’ ஆகிய வெற்றிப் படங்களில் நடித்துள்ள சுவாசிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தமிழ்நாட்டிலுள்ள வட மாவட்டத்தில் நடந்த ஒரு உணர்ச்சிப்பூர்வமான சம்பவத்தின் அடிப்படையில் கதை உருவாக்கப்பட்டுள்ளது. பாலாஜி ராம் இசையமைக் கிறார். தர்ஷன் கிர்லோஷ் ஒளிப் பதிவு செய்கிறார். மோகன் ராஜன் எல்லா பாடல்களை யும் எழுதுகிறார்.

Tags : Vijay Antony ,Swasika ,Sasi ,Chennai, ,Ajay Dishan ,Sasi… ,
× RELATED ‘பிச்சைக்காரன்‘ பட வாய்ப்பை மிஸ்...