×

அர்ஜென்டினா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து: நெருப்பில் உடல் கருகி தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழப்பு

புவெனஸ் ஐரிஸ்: அர்ஜென்டினாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். அர்ஜென்டினாவில் தெற்கு பகுதியில் உள்ள நியூகன் மாகாணத்தில் பிளாசா ஹுயின்குல் நகரில் என்ற இடத்தில் அமைந்துள்ள நியூ அமெரிக்கன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. அப்போது ஆலையில் உள்ள முக்கிய கச்சா எண்ணெய் தொட்டியில் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. அப்போது கற்று பலமாக வீசியதால் மளமளவென பற்றி எறிந்த தீ ஆலையம் எங்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த பிளாசா ஹுயின்குல் தீயணைப்பு படையினர் நெருப்பை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர். சில இடங்களில் மட்டும் நெருப்பை அணைத்த தீ அணைப்பு படை வீரர்கள் அங்கிருந்து 3 உடல்களை மீட்டுள்ளனர். தீக்காயம் அடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தீயை அணைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.   …

The post அர்ஜென்டினா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து: நெருப்பில் உடல் கருகி தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Buenos Aires ,Argentina ,Argentine ,
× RELATED அர்ஜெண்டினாவில் காலி பெட்டி மீது ரயில் மோதி 90 பயணிகள் காயம்