சசிகுமார் படத்தை தொடங்கி வைத்த சமுத்திரக்கனி

சுந்தரபாண்டியன் திரைப்பட இயக்குநருடன் சசிகுமார் மீண்டும் இணையும் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பை சசிகுமாரின் தோழரும், நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி தொடங்கி வைத்தார். இந்த படத்தில் மடோனா செபாஸ்டியன் சசிக்குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை நடிகர் சூர்யா சமீபத்தில் வெளியிட்டு இருந்தார்.

இந்த படத்தின் கதை 1990-1994 காலக்கட்டத்தில் தமிழகத்தில் ஒரு சிறு நகரத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கலையரசன், ஹரீஷ் பெராடி, சூரி, யோகி பாபு, துளசி, ஸ்ரீபிரியங்கா, டைரக்டர் மகேந்திரன், தீபா ராமானுஜம், தயாரிப்பாளர் இந்தர் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, 'மரகத நாணயம்', 'கனா' படங்களுக்கு இசையமைத்துள்ள திபு நைனன் தாமஸ் இசையமைக்கிறார். டான் போஸ்கோ எடிட்டிங் செய்கிறார். அருண்விஜய் நடித்த 'குற்றம் 23', 'தடம்' படங்களை தயாரித்த இந்தர் குமார் தனது ரேதான் சினிமாஸ் நிறுவனம் மூலமாக இந்த படத்தை தயாரிக்கிறார்.

Related Stories:

More