×

விமலின் ஆக்‌ஷன் படம்

சென்னை: விமல் நடிக்க, பிரமாண்டமாக உருவாகும் படத்தை மாசாணி பிக்சர்ஸ் எனும் புதிய நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.  இந்தப் படத்தில் நடிகர் விமலுடன் பாலா சரவணன், நரேன், மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வட மஞ்சு விரட்டை மையமாக கொண்ட இந்தப் படம் காதல், நட்பு, குடும்ப உணர்வை கூறும் கதையம்சம் கொண்ட ஆக்ஷன் படமாக உருவாகிறது.

வி. கேந்திரன் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். டி. இமான் இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை பிரசன்னா எஸ் குமார் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சாபு ஜோசப் மேற்கொள்கிறார். இந்தப் படத்திற்கு வி. சசிகுமார் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். இணை தயாரிப்பு பணிகளை எம்.லெனின் அண்ணாமலை மேற்கொள்கிறார். இந்தப் படத்தை ஆர். ராஜசேகர் தயாரிக்கிறார்.

Tags : Vimal ,Chennai ,Masani Pictures ,Bala Saravanan ,Naren ,Mottai Rajendran ,Singam Puli ,Vada Manju… ,
× RELATED ஜனவரி 16ல் ஜூலி காதல் திருமணம்