×

ஸ்விக்கி ஊழியர்கள் 5-வது நாளாக பணி புறக்கணிப்பு: பெங்களூரு தலைமை அலுவலகத்தை நோக்கி நடைபயணம்

சென்னை: ஊக்கத்தொகை குறைப்பு, பணிநேரம் அதிகரிப்பு உள்ளிட்ட புதிய ஊதிய கொள்கையை கைவிட வேண்டும் என்று கோரி 5 வது நாளாக பணி புறக்கணிப்பில் ஈடுப்பட்டு வரும் ஸ்விக்கி ஊழியர்கள் சென்னையில் இருந்து பெங்களூருவில் உள்ள அந்த தலைமை அலுவலகத்தை நோக்கி நடைப்பயணத்தை தொடங்கி இருக்கின்றனர். ஸ்விக்கியில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் கடந்த 5 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஸ்விக்கி தலைமை அலுவலகம்  இருக்க கூடிய பெங்களூரை நோக்கி நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த வாரம் ஸ்விக்கியில் பணியாற்ற கூடியவர்களுக்கு ஊதியம் மற்றும் காலநேரமானது மாற்றம் செய்யப்பட்டது. இதனை கண்டித்து இந்த போராட்டமானது தீவிரமடைந்து உள்ளது. தற்போது ஏராளமான ஊழியர்கள் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். ஸ்விக்கியின் தலைமையிடத்திற்கு செல்வதற்காக இந்த நடைபயணம் மேற்கொண்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர். அவர்கள் ஏற்கனவே உள்ள ஊக்கத்தொகை, பணிநேர குறைப்பு போன்றவற்றை முக்கிய கோரிக்கையாக வைத்துள்ளனர். கடந்த 4 தினங்களாக நுங்கம்பாக்கத்தில் போராடி கொண்டிருந்தவர்கள், தற்போது போராட்டம் ஸ்விக்கியின் தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும், தங்களது போராட்டம் வெளிவர வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதில் 200 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திரண்டு வந்து இந்த சாலைவழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.         …

The post ஸ்விக்கி ஊழியர்கள் 5-வது நாளாக பணி புறக்கணிப்பு: பெங்களூரு தலைமை அலுவலகத்தை நோக்கி நடைபயணம் appeared first on Dinakaran.

Tags : Swicky ,Bangalore ,Head Office ,Chennai ,Bengaluru ,Head ,Office ,
× RELATED எச்சில் துப்ப முயன்றபோது விபரீதம் பஸ்...