×

திரிப்தி டிம்ரி படத்துக்கு சென்சாரில் சிக்கல்

மும்பை: தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ‘கயல்’ ஆனந்தி நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம், ‘பரியேறும் பெருமாள்’. இப்படத்தின் இந்தி ரீமேக்கான ‘தடக் 2’ என்ற படத்தை கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

சித்தாந்த் சதுர்வேதி, திரிப்தி டிம்ரி நடித்துள்ளனர். ‘தடக்’ படத்தின் முதல் பாகம், மராத்தியில் நாகராஜ் மஞ்சுலே இயக்கிய ‘சாய்ராட்’ என்ற படத்தின் ரீமேக்காகும். இதை தர்மா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்தது. ஷாஜியா இக்பால் இயக்கியுள்ள ‘தடக் 2’ படத்தில் இடம்பெற்ற சாதி தொடர்பான வசனங்களால் இப்படம் சென்சாரில் சிக்கலை எதிர்கொண்டது.

இதனால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரிலீசாக வேண்டிய இப்படம், கடந்த மார்ச் மாதம் தள்ளிவைக்கப்பட்டது. எனினும், படம் திரைக்கு வர தாமதமானது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற சாதி தொடர்பான 16 வசனங்கள் சென்சாரில் தணிக்கை செய்யப்பட்டு, யு/ஏ 16+ என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, வரும் ஆகஸ்ட் 1ம் தேதி ‘தடக் 2’ படம் உலகம் முழுவதும் திரைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : Mumbai ,Mari Selvaraj ,Kadir ,Kayal' Anandi ,Karan ,Johar ,Dharma Productions ,Sidant Chaturvedi ,Tribti Timri ,
× RELATED ‘உங்க படத்துல உதவி இயக்குனரா வேலை...