×

உ.பி-யில் விவசாய நிலங்களில் முள்வேலி கம்பிக்கு தடை

லக்னோ: உத்தரபிரதேச மாநில அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், அம்மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் எழுதிய கடிதத்தில், ‘கோ சேவா ஆயோக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, விவசாயிகள் தங்கள் வயல்களுக்குள் விலங்குகள் நுழைவதைத் தடுக்க பிளேடு கம்பிகள் அல்லது முள்கம்பிகள் அமைக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக, கயிறுகள் அல்லது சாதாரண கம்பிகளைப் பயன்படுத்த வேண்டும். கால்நடை பாதுகாப்பை கருத்தில் கொண்டு, விவசாய நிலங்களில் பிளேடு கம்பிகள், முள்கம்பிகள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறுவோர் மீது, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post உ.பி-யில் விவசாய நிலங்களில் முள்வேலி கம்பிக்கு தடை appeared first on Dinakaran.

Tags : B. Lucknow ,Uttar Pradesh ,Additional Chief Secretary of State ,Ko Seva Aayog ,Dinakaran ,
× RELATED உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்...