×

பாலாற்றின் குறுக்கே உள்ள அணையில் தண்ணீர் சேமிக்கும் அளவை அதிகரிக்க ஆந்திர அரசு முடிவு: தமிழக விவசாயிகள் அதிர்ச்சி

அமராவதி: பாலாற்றின் குறுக்கே உள்ள அணையில் தண்ணீர் சேமிக்கும் அளவை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக குப்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கூறினார். ஆந்திர முதலமைச்சரின் இந்த பேச்சால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆந்திர மாநிலம் குப்பம் அருகே தமிழக – ஆந்திர எல்லையில் கனக நாச்சியம்மன் கோயில் அருகே நீர்த்தேக்கம் உள்ளது. இந்த நீர்த்தேக்கத்தின் உயரத்தை அதிகரிக்காமல் தண்ணீர் சேமிக்கும் அளவை அதிகரிக்க ரூ.120 நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார். மேலும் நீர்த்தேக்கத்தில் சேமிக்கப்படும் தண்ணீரின் அளவை அதிகாரிக்கு பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனவும் அவர் கூறினார். குடிப்பள்ளி அருகே புள்ளி 77 டிஎம்சியும், சாந்திபுரம் அருகே புள்ளி 3 டிஎம்சி தண்ணீர் சேமிக்க 2 நீர்த்தேக்கங்கள் கட்ட ஏற்பாடு செய்யட்டுள்ளதாக ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார். 2 நீர்த்தேக்கங்கள் கட்ட ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் கூறியுள்ளார். பாலாற்றின் குறுக்கே உள்ள அணையில் தண்ணீர் சேமிக்கும் அதிகரிக்கபட்டால் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறையும் என தமிழக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். …

The post பாலாற்றின் குறுக்கே உள்ள அணையில் தண்ணீர் சேமிக்கும் அளவை அதிகரிக்க ஆந்திர அரசு முடிவு: தமிழக விவசாயிகள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Andhra Govt ,Paladu ,Tamil Nadu ,Amaravathi ,AP Govt ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...