×

சூர்யாவுடன் நடிக்க கீர்த்தி சுரேஷ் மறுப்பு

சென்னை: விஜய் தேவரகொண்டா படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் சூர்யாவின் 46வது திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும், அதை கீர்த்தி மறுத்துவிட்டாராம்.

சூர்யாவின் 46வது படத்தில் கீர்த்தி சுரேஷை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், இவர்கள் கேட்கும் அதே தேதியில், விஜய் தேவரகொண்டா படத்திற்கு கால்ஷீட் தந்துவிட்டதால் சூர்யா படத்திற்கு கீர்த்தியால் கால்ஷீட் தரமுடியாமல் போய்விட்டது என கூறப்படுகிறது. இதனால் சூர்யாவுடன் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கவிருந்த வாய்ப்பை கீர்த்தி தவறவிட்டுள்ளார்.

இதற்கு முன் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யாவின் 46வது படத்தை லக்கி பாஸ்கர் பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். இதில் இன்னொரு ஹீரோயினாக மமிதா பைஜு நடிக்கிறார்.

Tags : Keerthy Suresh ,Suriya ,Chennai ,Vijay Deverakonda ,Keerthy ,
× RELATED இரண்டாவது படத்திலேயே இயக்குனரான நடிகை