×

ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டமன்ற தேர்தல் நடப்பதற்காக ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் மூத்த தலைவரான தாரீக் ஹமீத் கர்ரா தனது டிவிட்டரில் வெளியிட்டு உள்ள பதிவில், ‘மின்னணு இயந்திரங்கள், தேர்தல் தொடர்பான பிற பொருட்களை ஏற்றிய 150 லாரிகள் ஜம்முவை அடைந்துள்ளன. அவை இரவு நேரத்தில் லாரிகளில் இருந்து இறக்கப்பட்டு சிவில் செயலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம்  தயாராகி வருகிறது’ என பதிவிட்டுள்ளார். தற்போது, ஜம்மு மற்றும் காஷ்மீரில் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை வௌியிடும் செயல்முறை நடந்து வருகிறது. நவம்பர் 25ம் தேதிக்குள் இந்த நடவடிக்கைகளை முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. …

The post ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Srinagar ,Jammu and ,Kashmir ,Jammu and Kashmir Congress ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தொடரும்: மெகபூபா உறுதி