×

வனிதாவுக்கு டைட்டில் கொடுத்த அம்பிகா

தனது மகள் ஜோவிகா விஜயகுமாரின் வனிதா பிலிம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க, வனிதா விஜயகுமார் எழுதி இயக்கி ஹீரோயினாக நடித்துள்ள படம், ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’. ராபர்ட், மன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், டாக்டர் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் நடித்துள்ளனர். டி.ராஜபாண்டி, விஷ்ணு ராமகிருஷ்ணன், டி.ஜி.கபில் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். காந்த் தேவா இசை அமைத்துள்ளார். இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் வசந்தபாலன், ‘பெண் இயக்குனர்கள் தங்களின் கதைகளை சொல்ல வேண்டும். சினிமா, இயக்கம் ஆகியவை ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஆண்களிடம் மட்டும் சினிமா இல்லாமல், ஒவ்வொருவரும் தங்களுடைய கதைகளை சொல்ல முன்வர வேண்டும். தற்போது யூடியூப்பில் வயதான ஒரு பெண்மணி தனது பேரன் அல்லது பேத்தியுடன் இணைந்து நடனமாடி, அந்த வீடியோவை உடனே பதிவேற்றம் செய்கிறார். இந்த ஷார்ட்ஸ் உலகத்தை பார்க்கும்போது, ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பெண்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதை பார்க்க முடிகிறது. அந்தவகையில் இந்த சமூகத்துக்கு சொல்வதற்கு வனிதாவிடம் கதை இருக்கிறது. அதுதான் ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’. வனிதா ஒரு தைரியசாலி’ என்றார். அம்பிகா பேசும்போது, ‘இப்படத்தின் டைட்டில் தனக்கு பிடித்திருப்பதாக வசந்தபாலன் சொன்னார்.

இந்த டைட்டிலை தேர்வு செய்தது நான்தான்.‌ இதுகுறித்து வனிதா பேசியபோது, ‘ஏன் ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ்’ இருக்க வேண்டும்? ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ ஆக இருக்கக்கூடாதா?’ என்று கேட்டேன். இப்படித்தான் டைட்டில் உருவானது’ என்றார்.

Tags : Ambika ,Vanitha ,Jovica Vijayakumar ,Vanitha Film Productions ,Vanitha Vijayakumar ,Robert ,man ,Shakeela ,Ganesh ,Aarthi Ganesh ,Dr. ,Srinivasan ,Chef ,Damu ,Kumtaaj ,
× RELATED நடிகைக்கு சேலையை பரிசளித்தார்:...