×

என் மகள் ஜோவிகா ஹீரோயின்: வனிதா விஜயகுமார் தகவல்

சென்னை: வனிதா விஜயகுமார் எழுதி இயக்கி ஹீரோயினாக நடித்துள்ள படம், ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’. வனிதா பிலிம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஜோவிகா விஜயகுமார் தயாரித்துள்ளார். ராபர்ட், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், டாக்டர் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் நடித்துள்ளனர். டி.ராஜபாண்டி, விஷ்ணு ராமகிருஷ்ணன், டி.ஜி.கபில் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார்.

அடுத்த மாதம் திரைக்கு வரும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் வனிதா விஜயகுமார் பேசியதாவது: என் அம்மா மஞ்சுளாவுக்கு பிறகு அம்பிகா மற்றும் ஷகீலாவை என் அம்மாவுக்கு நிகராக பார்க்கிறேன். படத்தின் கேப்டனே இயக்குனர்தான். என்மீது அதிக நம்பிக்கை வைத்து பணியாற்றிய ஸ்ரீகாந்த் தேவாவுக்கு நன்றி.

அவரது பெயருக்கு முன்னால், ‘ரொமான்ஸிக்கல்’ என்ற வார்த்தையை அறிமுகம் செய்கிறோம். இயக்குனர் பி.வாசு சாரிடம் ‘பொண்ணு வீட்டுக்காரன்’ உள்பட சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினேன். விரைவில் ஜோவிகா 2 படங்களில் ஹீரோயினாக நடிக்கிறார். சுமந்த் ஆர்ட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.ராஜூ தயாரிக்கிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Tags : Jovica ,Vanitha Vijayakumar ,Chennai ,Jovica Vijayakumar ,Vanitha Film Productions ,Robert ,Sriman ,Shakeela ,Ganesh ,Aarthi Ganesh ,Dr. Srinivasan ,Chef ,Damu ,Kumtaaj ,
× RELATED நடிகைக்கு சேலையை பரிசளித்தார்:...