×

மாடலுடன் ஜோடி சேர்ந்த சாய் பிரியா

தமிழ்வாணன், சாய் பிரியா ஜோடியாக நடிக்கும் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. நட்டி நடித்த ‘போங்கு’ என்ற படத்துக்கு பிறகு தாஜ் எழுதி இயக்குகிறார். விஜய் எஸ்.குமரன் ஒளிப்பதிவு செய்கிறார். எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசை அமைக்கிறார். துரைராஜ், ராஜா முகமது பாடல்கள் எழுதுகின்றனர். லினு.எம் எடிட்டிங் செய்ய, தாஜ் (சங்கர்) அரங்கம் அமைக்கிறார். டாம்ஸ் கன்சல்டன்சி சார்பில் பிரபல மாடல் தமிழ்வாணன் தயாரித்து ஹீரோவாக அறிமுகமாகிறார். உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் படம் உருவாக்கப்படுகிறது.

இந்த உலகில் பணத்தை விட அதிகாரம்தான் பெரியது என்பதை புரிந்துகொண்ட ஒருவன், வாழ்க்கையில் தனக்கு கிடைக்கும் அதிகாரத்தை வைத்து என்ன செய்கிறான் என்பது படம். தனது காதலால் ஏற்படும் பிரச்னை மற்றும் நண்பர்களுக்கு ஏற்படும் பிரச்னையை தனது அதிகாரத்தால் எப்படி சரிப்படுத்துகிறான் என்பது கதை. கமர்ஷியலுடன் கூடிய காமெடி படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு சென்னையில் ஒரேகட்டமாக நடந்து முடிகிறது.

Tags : Sai Priya ,Tamilvanan ,Natty ,Taj ,Vijay S. Kumaran ,M.S. Jones Rupert ,Durairaj ,Raja Mohammed ,
× RELATED ஜனவரி 16ல் ஜூலி காதல் திருமணம்