×

அதிமுக ஆட்சியில் அறிவித்து பெயரோடு நிற்கும் குரங்கணி சுற்றுலாத்திட்டம் செயல்படுத்தப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

போடி : போடி அருகே மேற்கு மலையில் அதிமுக அரசின் அறிவிப் போடு நிற்கும் குரங்கணி சுற்றுலா திட்டத்தை புதிய தமிழக அரசு ஆய்வு செய்து அறிவிப்பை உறுதி செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.போடி அருகே மேற்கு மலை தொடர்ச்சி யில் கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உ யரத்தில் போடிமெட்டு மற்றும் குரங்கணி டாப் ஸ்டேஷன் போன்ற மலை கிராம வாசல்கள் உள்ளது. இந்த உச்சி மலையில் எப்போதும் குளிர்ந்த காற்றும் மிதமான இதமான நல்ல குளிர்ச்சி அடையச் செய்யும் சீதோசன நிலையும் வருடம் முழுவதுமே நிலவி வருவதால் இங்கு ஏலம், தேயிலை, மிளகு, ஆரஞ்சு, நெல், கொய்யா, மா, பாக்கு, சப் போட்டா, தென்னை, இலவு போன்ற பணப்பயிரிகள் உட்பட பலவித பயிர்களும் தொடர் சாகுபடி விவசாயம் எப்போதும் தடையின்றி நடந்து வருகிறது.இதில் கொட்டகுடி ஊராட்சி ஒன்றிய கிராமத்தில் கொழுக்குமலை, குரங்கணி, முட்டம், மேல்முட்டம், கீழ் முட்டம், நடு முட்டம், முதுவாக்குடி, சென்ட்ரல் ஸ்டேஷன், டாப் ஸ்டேஷன், காரிப்பட்டி, அடகு பாறை, கொம்பு தூக்கி அய்யனார் கோயில், பிச்சாங்கரை உட்பட பல கிராமங்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர்.பெரும்பாலும் விவசாயிகளும் கூலி தொழிலாளர்களுமே அதிகம் இருக்கின்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இங்கு விளையும் நறுமண பொருட்களை அவர்களது நாடான இங்கிலாந்திற்கு கொ ண்டு சென்று பயன் அடைந்து வந்தனர். இந்த டாப் ஸ்டேஷன் முதல் சுற்றியுள்ள மலை கிராமங்களில் தோட்டப்பகு திலி ருந்து அறுவடை செய்யப்படும் உணவு பொருட்கள் அடங்கிய சுமைகளை உயர்ந்த மலையிருந்து குரங்கணி கொண்டு வருவதற்கு முட்டம் சாலையில் வின்ஜ் அமைத்து ரோப் மூலமாக இறக்கி வைத்து சேர்க்கப்படும், மேலும் இப்பகுதியில் தினந்தோறும் வேலை செய்யும் தொழிலாளர்களையும் இதே ரோப்பில் ஏற்றி இறக்கி விடுவது வழக்கம்.அதன் பிறகு குரங்கணியிலிருந்து முதுவாக்குடி சென்ட்ரல் ஸ்டேஷன் வரை 16 கிலோ மீட்டர் தூரம் செல்லும் பழக்கத்தையும் உருவாக்கி உள்நாடு முதல் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குரங்கணி வந்து ட்ரக்கிங் செய்து மூணாறு மற்றும் கேரளா பகுதிகளில் சுற்றிச் செல்வது வழக்கமாக இருந்தது. இதனால் இந்த சுற்றுலா பயணிகளால் தமிழ்நாடு மற்றும் கேரள பகுதிகளுக்கு வருமானம் கிடைத்து வந்தது .தொடர்ந்து இந்த இயற்கை சூழலையும் ட்ரெக்கிங் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மனதில் கொண்டு அப்போதிருந்த அதிமுக அரசு கடந்த 2011 ஆம் ஆண்டு குரங்கணி கொட்டகுடி டாப் ஸ்டேஷன் பகுதிகள் சுற்றுலா தலமாக அறிவித்தது.அந்த அறிவிப்பிற்கும் பின்னால் மேலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. இவர்களிடம் வனத்துறை கொட்டகுடி பஞ்சாயத்து உள்ளிட்டவர்கள் அதற்கான வழி முறைகளில் வரியை கட்டணமாக மட்டும் வசூல் செய்து வந்தனர். இதனை தொடர்ந்து அதிமுக அரசில் சுற்றுலாத்தலமாக உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு மட்டுமே இருந்து வந்த நிலையில் அதற்கான ஆக்கப்பூர்வமாக மேம்படுத்துப் பணிகள் எதுவும் செய்யப்படவே இல்லை.குரங்கணி தீவிபத்து சம்பவத்திற்கு பிறகு பாதுகாப்பு வழிகாட்டிகளுடன் 15 க்கு மேற்பட்ட நிபந்தனைகளுடன் சுற்றுலா பயணிகள் சென்று வரலாம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இப்பகுதிகளில் மழைக்காலங்களில் கொட்டக்கூடிய ஆற்றின் வெள்ளம் பெருக்கெடுக்கும் போது பல்வேறு அருவிகள் இப்பகுதிகளில் கொட்டும் சுற்றுலா பயணிகள் கடக்கும் போது இந்த அருவிகளையும் இயற்கை வளங்களையும் ரசித்து சென்று ட்ரக்கிங் சென்று வருகின்றனர். மேலும் குரங்கணியிலிருந்து வனப்பகுதி எல்லை வரை ஐந்து கிலோ மீட்டர் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரங்களில் கொட்டகுடி கிராம பஞ்சாயத்தில் உள்ள கொழுக்குமலை, முதுவாக்குடி ,சென்ட்ரல் ஸ்டேஷன், முட்டங்கள், டாப் ஸ்டேஷன் வரை வாக்காளர்கள் ஓட்டு போடுவதற்கு குரங்கணி வரை ஓட்டு பெட்டி மற்றும் இயந்திரங்களை ஜீப்பில் கொண்டுவந்து மறுபடியும் குதிரைகளின் வாயிலாக மேற்படி கிராமங்களுக்கு வாக்கு மையத்திற்கு கொண்டு செல்வது இன்றும் நடை முறையில் உள்ளது.இதற்கிடையில் 2011 ஆம் ஆண்டு குரங்கணி டாப் ஸ்டேஷன் வரை சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்ட நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் புதியதாக பொறுப்பேற்றிருக்கும் திமுக அரசு பொதுமக்கள் மற்றும் அரசு வருமானம் நலன் கருதி மறுபடியும் சுற் றுலா தளமாக அறிவித்து அதனை மேம் படுத்தும் விதமாக அனைத்து விதமான வசதிகளையும் ஏற்படுத்தி கடுமையான கட்டுபாடுள்ள விதிகளின் படி வனங்களும் மிருங்களுக்கும் பாதிக்காத வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர்.குரங்கணி தீ விபத்துகடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி சுற்றுலா பயணிகள் கேரளா மாநிலம் மூணார் பகுதியில் சுற்றிப் பார்த்துவிட்டு வழிப்பாதை மாறி கொழுக்கு மலைப்பகுதியில் டென்ட் அடித்து தங்கி விட்டு மாலையில் குரங்கணி நோக்கி நடந்த போது ஒற்றை மரத்து பகுதியில் எரிந்து கொண்டிருந்த காட்டு தீயில் சிக்கி 23 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு சமூக ஆர்வலர்கள் உயர்நீதி மன்றத்தில் ட்ரெக்கிங் செல்ல கூடாது என வழக்கு தொடர்ந்ததால் கால வரையின்றி ட்ரெக்கிங் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்தது….

The post அதிமுக ஆட்சியில் அறிவித்து பெயரோடு நிற்கும் குரங்கணி சுற்றுலாத்திட்டம் செயல்படுத்தப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK government ,Bodi ,AIADMK Govt ,West Hill ,ADMK ,Dinakaran ,
× RELATED போடி-தேவாரம் சாலையில்...