×

ஏஸ் படத்தில் பெண் வேடத்தில் யோகி பாபு

சென்னை: விஜய் சேதுபதியுடன் இணைந்து யோகி பாபு நடித்துள்ள படம் ‘ஏஸ்’. இப்படம் நேற்று முன்தினம் திரைக்கு வந்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு இணையான வேடத்தில் யோகி பாபுவும் அசத்தியிருக்கிறார் என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக படத்தில் யோகி பாபு பெண் வேடத்தில் நடித்திருப்பது காமெடி காட்சிகளில் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முன் பல காமெடியன்கள் பெண் வேடங்களில் நடித்திருந்தாலும் யோகி பாபு இதில்தான் முதல்முறையாக இதுபோல் நடித்துள்ளார். கதைக்கு தேவையாக இருந்ததாலேயே இதுபோல் நடித்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து விஜய் சேதுபதி கூறும்போது, ‘‘யோகிபாபுதான் இந்த படத்தின் இன்னொரு ஹீரோ என கூறுவேன். அவரின் சிந்தனையை நினைத்து ஆச்சரியப்படுவேன். இத்தனை படங்களில் நடித்து வருகிறார். ஆனால் கடுமையாக உழைக்கிறார். படத்தின் டப்பிங் நேரத்தில் கூட காட்சியை மேம்படுத்த முயற்சி செய்வார். ஏஸ் படத்தின் முக்கிய தூண் என்றால் அது யோகிபாபு தான்’’ என்றார்.

Tags : Yogi Babu ,Chennai ,Vijay Sethupathi ,
× RELATED ஜனவரி 16ல் ஜூலி காதல் திருமணம்