×

ராணிப்பேட்டை சிப்காட் அருகே ஆன்லைனில் வாங்கிய செல்போன் வெடித்ததால் மாணவன் படுகாயம்

ராணிப்பேட்டை:  ஆன்லைனில் வாங்கிய செல்போன் வெடித்ததால் மாணவன் படுகாயம் அடைந்தார். ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த கொண்டகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி, டிபன் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் முத்து (16). இவர் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய மாமா சந்தோஷ், முத்துவுக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்து ரூ.12 ஆயிரத்துக்கு செல்போன் ஒன்றை கடந்த ஏப்ரல் மாதம் வாங்கி கொடுத்துள்ளார். அந்த செல்போனை தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு பைக்கில் உறவினர் மனோகருடன் வாலாஜா ரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு நேற்று சென்றுள்ளார். அப்போது வாணாபாடி அருகே அம்மூர் சாலையில் பைக் வந்தபோது முத்துவின் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் பேன்ட் பற்றி எரிந்து முத்து பைக்குடன் சாலை ஓர மரத்தின் மீது மோதி கீழே விழுந்தார். மனோகருக்கும் ஏற்பட்டது. இருவரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைனில் நான்கு மாதங்களுக்கு முன் வாங்கிய செல்போன் வெடித்து மாணவர் படுகாயம் அடைந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post ராணிப்பேட்டை சிப்காட் அருகே ஆன்லைனில் வாங்கிய செல்போன் வெடித்ததால் மாணவன் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Ranippet Chipkat ,Ranippet ,Muniyanti ,Ranipette Chipkat ,Chipkat ,Dinakaran ,
× RELATED தீபாவளிக்கு 14 டன் இனிப்பு வகைகள்...