×

தீபாவளிக்கு 14 டன் இனிப்பு வகைகள் விற்பனை செய்ய ஆவினில் இலக்கு அதிகாரி தகவல் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில்

வேலூர், அக்.29: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஆவினில் தீபாவளிக்கு ₹80 லட்சத்துக்கு 14 டன் இனிப்பு வகைகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக பொதுமேலாளர் தெரிவித்தார்.
தமிழ்நாடு அளவில் ஆவின் பால் நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் வரை விற்பனை செய்யப்படுகிறது. பால் விலை குறைப்பினால், தமிழ்நாடு அளவில் ஒரு கோடி நுகர்வோர் மற்றும் 450 நிறுவனங்கள் பயனடைந்து வருகின்றனர். ஆவின் நிறுவனம் சேவை நோக்கத்தோடு பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சுத்தமான மற்றும் தரமான பால் பொருட்களின் நியாயமான விலைக்கு விற்பனை செய்து வருகின்றது.

வேலூர் ஆவின் நிறுவனத்தில் நாளொன்றுக்கு சுமார் 1 லட்சம் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. பால் பாக்கெட்டுகள் தயார் செய்யப்பட்டு சுமார் 600 முகவர்களுக்கு 20 ஒப்பந்த வாகனங்கள் மூலம் அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தினமும் 76 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்கின்றனர். இது தவிர பல ஆயிரம் லிட்டர் பால் சென்னைக்கு விநியோகம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையொட்டி ஆவின் சார்பில் இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். அதன்படி, இந்தாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ஆவினில் 14 டன் இனிப்பு வகைகள் ₹80 லட்சத்துக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம செய்யப்பட்டுள்ளதாக ஆவின் பொதுமேலாளர் ராமமூர்த்தி தெரிவித்தார்.

The post தீபாவளிக்கு 14 டன் இனிப்பு வகைகள் விற்பனை செய்ய ஆவினில் இலக்கு அதிகாரி தகவல் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Tirupattur ,Ranipet ,Vellore, Tirupattur, Ranippet districts ,Diwali ,Vellore, Tirupattur, Ranippet ,Dinakaran ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...