×

உண்மை சம்பவ கதையில் போலீஸ் அதிகாரி வேடத்தில் சாய் தன்ஷிகா

சென்னை: ஆக்‌ஷன் ஹீரோயினாக சாய் தன்ஷிகா நடித்துள்ள படம், ‘யோகிடா’. மற்றும் ஷாயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் சிங், எஸ்தர், ராஜ் கபூர் நடித்துள்ளனர். நடிகர் கவுதம் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார். ஸ்ரீமோனிகா சினி பிலிம்ஸ் சார்பில் வி.செந்தில் குமார் தயாரிக்க, தீபக் தேவ் பின்னணி இசை அமைத்துள்ளார். ஜி.சசிகுமார் எடிட்டிங் செய்ய, பாடல்களுக்கு அஸ்வமித்ரா இசை அமைத்துள்ளார். ஜெயந்தி அஸ்வமித்ரா பாடல்கள் எழுதியுள்ளார். ஜி.எஸ்.அனந்தன் அரங்குகள் அமைத்துள்ளார். எஸ்.கே.பூபதி ஒளிப்பதிவு செய்ய, கே.கணேஷ் குமார் சண்டை பயிற்சி அளித்துஇருக்கிறார்.

படம் குறித்து சாய் தன்ஷிகா கூறியதாவது: நான் பணியாற்றும் போலீஸ் ஸ்டேஷனின் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொல்லப்படுகிறார். அதை அவரது குடும்பத்தார் தற்கொலை என்று மாற்ற முயற்சிக் கின்றனர். அதை கொலை என்று நிரூபித்து குற்றவாளியை கைது செய்கிறேன். ஆனால், அந்த குற்ற வாளியை விடுவிக்கச் சொல்லி பல்வேறு தரப்பில் அழுத்தம் தரப்படுகிறது. அதற்கு மறுப்பதால், இதைவிட மோசமான பகுதிக்கு டிரான்ஸ்பர் செய்கின்றனர். அங்கு நான் சந்திக்கும் பிரச்னைகளால் என்ன ஆகிறேன் என்பது கதை. அனைத்து தரப்பு பெண்களுக்கும் தற்காப்புக்கலை சேர வேண்டும் என்ற நோக்கத்துடன் இப்படத்தில் நடித்துள்ளேன். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது’ என்றார்.

Tags : Sai Dhanshika ,Chennai ,Shayaji Shinde ,Manobala ,Kabir Duhan Singh ,Esther ,Raj Kapoor ,Gautham Krishna ,V. Senthil Kumar ,Sri Monica Cine Films… ,
× RELATED ‘உங்க படத்துல உதவி இயக்குனரா வேலை...