×

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா ஜோடியாக மமிதா பைஜு

ஐதராபாத்: நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்து தெலுங்கு மற்றும் தமிழில் வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் தனது 46வது படத்தில் நடிக்கிறார். இது சித்தாரா எண்டர் டெயின்மெண்ட் தயாரிக்கும் 33வது படமாகும். முன்னதாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான ‘சார்’, ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்கள் வெற்றிபெற்றுள்ளதால், தேசிய விருது பெற்றிருக்கும் சூர்யாவும், வெங்கி அட்லூரியும் இணைந்துள்ள இப்படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

‘பிரேமலு’, ‘ரெபல்’ ஆகிய படங்களை தொடர்ந்து ‘ஜன நாயகன்’, ‘இரண்டு வானம்’, ‘டியூட்’ ஆகிய படங்களில் நடித்து வரும் மமிதா பைஜு, இதில் சூர்யா ஜோடியாக நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட் முன்னணி நடிகை ரவீணா டாண்டன் தெலுங்கில் ரீ-என்ட்ரி ஆகிறார். முக்கிய வேடத்தில் ராதிகா நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்க, நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.நாகவம்சி, சாய் சவுஜன்யா தயாரிக்கின்றனர். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட், ஃபார்ச்சூன் போர் சினிமாஸ் தயாரிக்கும் படத்தை காரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படம் வெளியாகிறது.

Tags : Mamita Baiju ,Suriya ,Venky Atluri ,RJ Balaji ,Sithara Entertainment.… ,
× RELATED ‘உங்க படத்துல உதவி இயக்குனரா வேலை...