×

விஜய் ஆண்டனியின் லாயர்

 

சென்னை: விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் உருவாகும் ‘லாயர்’ திரைப்படத்தை ‘ஜென்டில்வுமன்’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் ஜோஷ்வா சேதுராமன் இயக்குகிறார். நீதிமன்ற பின்னணியில் ஒரு வித்தியாசமான வழக்கை மையமாக வைத்து, இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன். இதுவரை திரையில் காட்டியிராத, நீதிமன்றத்தையும், அதன் நடைமுறைகளையும், தத்ரூபமாகத் திரையில் பிரதிபலிக்கும் திரைப்படமாக இப்படம் இருக்கும் என்கிறது படக்குழு.

விஜய் ஆண்டனியுடன் இப்படத்தில் அவருக்கு இணையான எதிர் கதாப்பாத்திரத்தில், இந்தியளவில் புகழ் பெற்ற ஒரு நடிகையும் இப்படத்தில் இணையவுள்ளார்.

Tags : Vijay Antony ,Chennai ,Vijay Antani Film Corporation ,Joshua Sethuraman ,
× RELATED ஜனவரி 16ல் ஜூலி காதல் திருமணம்