×

ஆஹா! வாழைப்பழம்!

ஏழை மக்களின் எளிய ஊட்டச்சத்துப் பழம் எனில் அது வாழைப்பழம்தான். அஞ்சு ரூபாய் முதல் அதிகபட்சமாகவே ஐம்பது ரூபாயில் கிடைக்கும் இப்பழத்தில் அத்தனை சத்துக்கள் உள்ளன. குறிப்பாக பொட்டாசியம் சத்து வாழைப்பழங்களில் அதிகம் நிறைந்துள்ளதால், தினமும் காலையில் வாழைப்பழம் சாப்பிட நாள் முழுவதும் சுறுசுறுப்பு, உற்சாகம் நிறைந்திருக்கும்.தினமும் காலை மற்றும் மதியவேளை உணவுகளை சாப்பிடுவதற்கு முன்பு ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து உணவு சாப்பிட்டு வந்தால் நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். கர்ப்பிணிப் பெண்கள் காலையில் எழுந்தவுடன் வரும் வாந்தி, குமட்டல், தலைசுற்றலால் சோர்வடையக் கூடும். இதனால் சத்துகள் குறைவதையும் வாழைப்பழம் கொடுப்பதால் சரி செய்யலாம். பெரும்பாலும் காலை உணவுகளை தவிர்ப்பவர்களுக்கும், அதிக கார உணவுகளை அடிக்கடி உண்பவர்களுக்கும் ஏற்படும். தினமும் காலை உணவை சாப்பிடுவதற்கு முன்பு ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு, பின்பு காலை உணவை சாப்பிட்டு வந்தால் இந்த அல்சர் புண்கள் கூடிய விரைவில் குணமாகும். இதய நலத்திற்கும் பொட்டாசியம் சத்து மிகவும் அவசியமாகிறது. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்றுவர வாழைப்பழத்தில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது….

The post ஆஹா! வாழைப்பழம்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED ஆசையை தூண்டும் வகையில் வலைதளங்களில்...