- காஜல் அகர்வால்
- மண்டோதரி
- மும்பை
- பான் இந்தியா
- நிதேஷ் திவாரி
- ரன்பீர் கபூர்
- ராம
- சாய் பல்லவி
- சீதா
- யாஷ்
- இராவணன்
- சன்னி டீல்
- அனுமன்
- ராகுல்…

மும்பை: ராமாயண கதையை அடிப்படையாக வைத்து 2 பாகங்களாக நிதேஷ் திவாரி இயக்கி வரும் பான் இந்தியா படம், ‘ராமாயணம்’. இதில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ், ஹனுமனாக சன்னி தியோல் நடிக்கின்றனர். தவிர ரகுல் பிரீத் சிங், லாரா தத்தா உள்பட பலர் நடிக்கின்றனர்.
மிகப் பிரமாண்டமாக உருவாகும் இதில், ராவணன் மனைவி மண்டோதரி கேரக்டரில் காஜல் அகர்வால் நடிக்கிறார். முதலில் வேறொரு ஹீரோயின் நடிப்பதாக இருந்தது. பாலிவுட்டை தொடர்ந்து தென்னிந்திய படவுலகிலும் காஜல் அகர்வாலுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், அவரையே இந்த கதாபாத்திரத்துக்கு தேர்வு செய்துள்ளதாக படக்குழு தெரிவித்தது.

