×

இரண்டு படங்களுக்கும் டியூட் தலைப்பு சிக்கலில் பிரதீப் ரங்கநாதன் படம்

ஐதராபாத்: ‘லவ் டுடே’, ‘டிராகன்’ ஆகிய படங்களுக்கு பிறகு பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ள இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் பான் இந்தியா படத்தில் நடித்துள்ளார். இதை இயக்குனர் சுதா கொங்கராவின் உதவியாளர் கீர்த்தீஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக ‘பிரேமலு’, ‘ரெபல்’ மமிதா பைஜூ நடித்துள்ளார். ‘டியூட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் வெளியாகி வைரலானது. இந்நிலையில் படத்தின் தலைப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த தலைப்பு தனது படத்துக்கானது என்று நடிகரும், இயக்குனருமான தேஜ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ‘ஒரு வருடத்துக்கு முன்பே ‘டியூட்’ என்ற படத்தை நான் அறிவித்துவிட்டேன். இந்நிலையில், தற்போது இத்தலைப்பை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தனது படத்துக்கு வைத்திருப்பதை அறிந்து அதிர்ந்தேன். இந்த முன்னணி தயாரிப்பு நிறுவனத்தை எதிர்த்து போராடும் எண்ணம் எனக்கு இல்லை. இவ்விஷயத்தை ஏற்கனவே நிறுவனத்திடம் சொல்லிவிட்டேன். அங்கிருந்து நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன்’ என்றார்.

Tags : Pradeep Ranganathan ,Hyderabad ,Mythri Movie Makers ,Sudha… ,
× RELATED ஜனவரி 16ல் ஜூலி காதல் திருமணம்