×

மலேசிய மாஜி பிரதமரிடம் பறிமுதல் 567 ஆடம்பர பைகள் 423 கைகடிகாரங்கள்: மொத்த மதிப்பு ரூ.2,175 கோடி

கோலாலம்பூர்: முன்னாள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் விலையுயர்ந்த 567 பைகள், 423 கடிகாரங்கள், 14 தலைப்பாகைகள் உட்பட 273 மில்லியன் டாலர் மதிப்பு ஆடம்பர பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், தனது பதவிக்காலத்தில் அரசு முதலீட்டு நிதி அமைப்பான எம்டிபி நிறுவனத்தில் இருந்து பல ஆயிரம் கோடி மோசடி செய்யதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் ஊழல் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினார்கள். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது விலை உயர்ந்த 567 பைகள், 423 கை கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 14 தலைப்பாகைகள் கைப்பற்றப்பட்டன.  இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2,175 கோடி. ரசாக்கின் மனைவி ரோஸ்மா  மான்சர் (70) தென்கிழக்கு ஆசியாவின் நவீனகால லேடி மக்பெத் ஆக இருக்கிறார். இவர் தனது ஆடம்பர செலவுக்காக கணவரை அரசு நிதியை கையாடல் செய்யும்படி கட்டாயப்படுத்தி உள்ளார். ரோஸ்மா வாங்கிய ஆடம்பர பொருட்களில் பிங்க் வைர பென்டன் மிகவும் முக்கியமானது. இவரது கை பைகள், ஆடம்பர பொருட்கள் விற்பனைக்கு பிரபலமான ஹெர்ம்ஸ் நிறுவனத்தில் வாங்கப்பட்டுள்ளன….

The post மலேசிய மாஜி பிரதமரிடம் பறிமுதல் 567 ஆடம்பர பைகள் 423 கைகடிகாரங்கள்: மொத்த மதிப்பு ரூ.2,175 கோடி appeared first on Dinakaran.

Tags : Malaysia ,KUALA LUMPUR ,Najib Razak ,
× RELATED மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது 2...