×

திருக்கோவிலூர் நகை கடையில் ரூ.52 லட்சம் மதிப்புள்ள தங்கம் வெள்ளி நகைகள் கொள்ளை: வெல்டிங் செய்து இரும்பு கதவில் துளையிட்டு துணிகரம்

திருக்கோவிலூர்:  திருக்கோவிலூரில் ரூ.52 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் கொள்ளைடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வடக்கு தெருவில் பிரபலமான நகைக்கடை உள்ளது. கடந்த ஆண்டு திருக்கோவிலூர் வடக்கு தெருவில் புதிய நகை கடை ஷோரும் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் கடையின் உரிமையாளர் பிரித்திவிராஜ் மகன் லோகேஷ் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று காலை வழக்கம்போல் காலை 8.50 மணியளவில் கடையை திறந்தபோது, ஷோகேசில் இருந்த தங்கம், வெள்ளி நகைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த திருக்கோவிலூர் டிஎஸ்பி பழனி, காவல் ஆய்வாளர் பாபு, உதவி ஆய்வாளர் சிவச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரனை நடத்தினார். விசாரணையில் மர்ம நபர்கள்நகை கடையின் பின்புறம் உள்ள பள்ளி வழியாக ஏணி மூலம் மொட்டை மாடிக்கு வந்துள்ளனர். பின்னர் அதே வழியாக ஆக்சிஜன் சிலிண்டர், சமையல் ஏரிவாயு சிலிண்டர் மற்றும் வெல்டிங் செய்ய வேண்டிய பொருட்களை கயிறு மூலம் கொண்டு சென்றுள்ளனர். நகைக் கடையின் மொட்டை மாடியில் உள்ள பெரிய இரும்பு கதவை வெல்டிங் செய்து பெரிய துளையிட்டுள்ளனர். பின்னர் படிக்கட்டு வழியாக உள்ளே சென்று அங்கு ஷோக்கேசில் வைக்கப்பட்டு இருந்த கம்மல், ஜிமிக்கி, மூக்குத்தி 600 கிராம் தங்க நகைககளையும், கொளுசு, டம்ளர் உள்ளிட்ட 40 கிலோ வெள்ளி பொருட்கள் என ரூ.52 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய கேஸ் சிலிண்டர், ஆக்சிஜன் சிலிண்டர் 3 உள்ளிட்ட பொருட்களை அங்கேயே போட்டுவிட்டு சென்றது தெரியவந்துள்ளது. விழுப்புரத்தில் இருந்து மோப்ப நாய் ராக்கி வரவழைக்கபட்டு விசாரணை நடத்தப்பட்டது. 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது….

The post திருக்கோவிலூர் நகை கடையில் ரூ.52 லட்சம் மதிப்புள்ள தங்கம் வெள்ளி நகைகள் கொள்ளை: வெல்டிங் செய்து இரும்பு கதவில் துளையிட்டு துணிகரம் appeared first on Dinakaran.

Tags : Tirukovilur ,Thirukovilur ,Venture ,Dinakaran ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது