×

ரீல்ஸ்களால் படம் பார்ப்பதை மக்கள் மறந்து விட்டனர்: சுஹாசினி வருத்தம்

சென்னை: அக்னி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் பிரகாஷ் மோகன்தாஸ், என்.கோபி கிருஷ்ணன் இணைந்து தயாரித்துள்ள படம், ‘தி வெர்டிக்ட்’. கிருஷ்ணா சங்கர் இயக்கியுள்ளார். பிரகாஷ் மோகன்தாஸ், வரலட்சுமி, ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி, வித்யுலேகா ராமன் நடித்துள்ளனர்.

வரும் 30ம் தேதி ஜகதா எண்டர்பிரைசஸ் வெளியிடும் இப்படத்தின் நிகழ்ச்சியில் சுஹாசினி பேசியதாவது:
லட்சுமி நடித்த படத்தின் ரீமேக் என்றால் தைரியமாக நடிப்பேன். தமிழில் அவர் நடித்த ‘சிறை’, ‘சம்சாரம் அது மின்சாரம்’ ஆகிய படங்கள் மட்டுமின்றி, கன்னடத்தில் நடித்த சில படங்களின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்துள்ளேன். ‘தி வெர்டிக்ட்’ கதையை அவரிடம் சொல்லி, 6 நாட்கள் கால்ஷீட் என்றதும், ‘முடியாது’ என்று மறுத்தார் என்று கேள்விப்பட்டேன். அவர் ஓ.கே செய்த கதை என்பதால் நடித்தேன். தற்போது சில நடிகர், நடிகைகள் 12 பேர் இல்லாமல் படப்பிடிப்புக்கு வருவது இல்லை. ஆனால், நான் தனியாகத்தான் சென்று நடித்தேன். ரீல்ஸ்களை பார்த்து பார்த்து மக்கள் படம் பார்ப்பதை மறந்துவிட்ட காலம் இது.

Tags : Suhasini Varutham ,Chennai ,Prakash Mohandas ,N. Gopi Krishnan ,Agni Entertainment ,Krishna Shankar ,Varalakshmi ,Sruthi Hariharan ,Suhasini ,Vidyulekha Raman ,Jagatha Enterprises… ,
× RELATED மலையாள சினிமாவில் தாக்கம் ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீனிவாசன் மரணம்