×

இறுதி சடங்குக்கு பிறகு இங்கி. முழுவதும் 2 நிமிடம் ராணிக்கு மவுன அஞ்சலி

லண்டன்: இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு முடிந்த பிறகு,  நாடு முழுவதும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத், கடந்த 8ம் தேதி தனது 96 வயதில் இறந்தார். அவருடைய இறுதிச் சடங்கு வரும் 19ம் தேதி நடக்கிறது. அவருக்கு அருகில், கடந்தாண்டு ஏப்ரலில் உயிரிழந்த அவருடைய கணவர் பிலிப்பின் உடலும் அடக்கம் செய்யப்பட உள்ளது. தனது இறுதிச்சடங்கின் போதே கணவரையும் தனக்கு அருகே அடக்கம் செய்ய வேண்டும் என்பது ராணியின் கடைசி விருப்பம். அதற்காகவே, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிலிப்பின் உடல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், வரும் 19ம் தேதி ராணியின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நிரலை பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ளது. அதில், ‘ராணியின் உடல் இறுதிச் சடங்குக்கு முன்பாக, குதிரைகள் பூட்டிய பீரங்கி வண்டியில்   லண்டனின் முக்கிய சாலைகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும்.  செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் அவருக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை அளிக்கப்படும். பின்னர், வின்சர் கோட்டை வளாகத்தில் நடக்கும் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் வெளிநாட்டு தலைவர்கள் உட்பட 2 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பார்கள். ராணியின் உடலுக்கு அருகே அவருடைய கணவர் பிலிப் உடலும் அடக்கம் செய்யப்படும். ராணியின் இறுதிச் சடங்கிற்கு பிறகு, இங்கிலாந்து முழுவதும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படும்,’ என்று கூறப்பட்டுள்ளது….

The post இறுதி சடங்குக்கு பிறகு இங்கி. முழுவதும் 2 நிமிடம் ராணிக்கு மவுன அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : London ,Queen Elizabeth 2 ,England ,Queen ,
× RELATED மலர்களோடு பூத்துக் குலுங்கும்