×

புஷ்பா பட பாடலுக்கு டான்ஸ் ஆடிய சிறுமியை நேரில் பார்க்க ராஷ்மிகா விருப்பம்

பெங்களூர்: புஷ்பா படத்தில் வரும் ‘சாமி’ பாடலுக்கு நடனமாடிய சிறுமியை பார்க்க நடிகை ராஷ்மிகா விருப்பம் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் உருவான ‘புஷ்பா’ படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற ‘சாமி’ என்ற பாடல் மிகப்பெரிய அளவில் வைரலானது. இந்த பாட்டின் மெட்டுக்கு ஏற்ப ராஷ்மிகா செம நடனம் ஆடியதை ரசிகர்கள் இன்னும் ரசித்து வருகிறார்கள். யூடியூபில் தொடர்ந்து இந்த பாடல் டிரெண்டிங்கில் இருந்தது.இந்த நிலையில் இந்த பாடலுக்கு ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் டான்ஸ் ஆடிய வீடியோக்கள் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இந்த பாடலுக்கு பள்ளி சிறுமி ஒருவர் சூப்பர் டான்ஸ் ஆடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ள ராஷ்மிகா, ‘இந்த க்யூட் சிறுமியை நான் நேரில் பார்க்க விரும்புகிறேன், யாராவது ஹெல்ப் பண்ணுங்கள்’ என்று கூறியுள்ளார். விரைவில் இந்த சிறுமியை ராஷ்மிகா மந்தனா நேரில் பார்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது….

The post புஷ்பா பட பாடலுக்கு டான்ஸ் ஆடிய சிறுமியை நேரில் பார்க்க ராஷ்மிகா விருப்பம் appeared first on Dinakaran.

Tags : Rashmika ,Bangalore ,
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...