சென்னை: ‘லவ் டுடே’, ‘டிராகன்’ ஆகிய படங்களை தொடர்ந்து பிரதீப் ரங்க நாதன் நடித்த ‘டியூட்’ என்ற பான் இந்தியா படம், வரும் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்ஐகே) என்ற படம், வரும் செப்டம்பர் 18ம் தேதி திரைக்கு வருகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா, கிரித்தி ஷெட்டி, யோகி பாபு, கவுரி கிஷன், ஷாரா ஆகியோருடன் சிறப்பு வேடத்தில் சீமான் நடித்துள்ளார்.
இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ்.லலித்குமார், ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா சேர்ந்து தயாரித்துள்ளனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். பிரதீப் ஈ.ராகவ் எடிட்டிங் செய்கிறார். டி.முத்துராஜ் அரங்கம் அமைக்கிறார். மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
