×

திருமணத்துக்கு எந்த பெண் வேண்டும்..? சிம்பு பதில்

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், திரிஷா ஆகியோருடன் இணைந்து சிம்பு நடித் துள்ள ‘தக் லைஃப்’ என்ற படம், வரும் ஜூன் 5ம் தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து ‘பார்க்கிங்’ ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் ‘எஸ்டிஆர் 49’ என்ற படத்தில், கயாடு ேலாஹர் ேஜாடியாக நடிக்கும் சிம்பு, மேலும் 2 புதுப்படங்களில் நடிப்பதாக அறிவித்துள்ளார். அந்த படங்களை ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ அஷ்வத் மாரிமுத்துவும், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ தேசிங்கு பெரியசாமியும் இயக்குகின்றனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிம்பு, ‘இந்த வயதில் எது வேண்டும் என்றாலும் தயங்காமல் சாப்பிடலாம், ஜாலியாக இருக்கலாம். இந்த வயதில் எதுவுமே பிரச்னை கிடையாது. அதற்காக, விருப்பப்பட்ட அனைத்தையும் சாப்பிட்டுவிட்டு உடம்பை கெடுத்துக்கொள்ளாதீர்கள். பிறகு எதிர்காலத்தில் கஷ்டப்படுவீர் கள். இரவு அதிகமாக சாப்பிட்டுவிட்டு உடனே தூங்காதீர்கள். அதை மட்டும் தவிர்த்து, குறைந்த அளவில் சாப்பிட்டுவிட்டு, சிறிது பசியோடு தூங்கினால் எல்லாமே சரியாக இருக்கும்’ என்றார்.

அப்போது சிம்புவிடம், ‘கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரும், நகரத்தை சேர்ந்த பெண் ஒருவரும் புரபோஸ் செய்தால், யாரை ஏற்றுக்கொள்வீர்கள்?’ என்ற கேள்வி கேட்கப் பட்டது. அதற்கு பதிலளித்த சிம்பு, ‘கிராமத்து பெண், நகரத்து பெண் என்று பிரித்து பார்க்க வேண்டாம். பெண்கள் என்றால் பெண்கள்தான். ஜீன்ஸ் அணிந்த பெண்கள் கெட்டவர்களும் இல்லை; சுடிதாரில் இருப்பவர்கள் எல்லோரும் நல்லவர்களும் இல்லை. அப்படி நான் தேர்ந்து எடுக்க வேண்டும் என்றால், அவர் பெண்ணாக இருந்தால் போதும்’ என்றார். அவரது பதில் வைரலாகி வருகிறது.

Tags : Simbu ,Chennai ,Mani Ratnam ,Kamal Haasan ,Trisha ,Ramkumar Balakrishnan ,Kayadu ,
× RELATED இரண்டாவது படத்திலேயே இயக்குனரான நடிகை