×

பிரதீப் ரங்கநாதன், மமிதா நடிக்கும் டியூட்

சென்னை: தமிழில் ரவி மோகன் நடித்த ‘கோமாளி’ என்ற படத்தை இயக்கிவிட்டு, பிறகு ‘லவ் டுடே’, ‘டிராகன்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து ஹிட் கொடுத்திருக்கும் பிரதீப் ரங்கநாதன், தற்போது ஹீரோவாக நடித்து வரும் படம், ‘டியூட்’. முக்கிய வேடங்களில் சரத்குமார், ‘பிரேமலு’ மமிதா பைஜூ, ரோகிணி, ஹிருது ஹாரூன், டிராவிட் செல்வம் நடிக்கின்றனனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இயக்குனர் சுதா கொங்கராவின் உதவியாளர் கீர்த்தீஸ்வரன் எழுதி இயக்குகிறார்.

வரும் தீபாவளியன்று திரைக்கு வருவதாக அறிவிகப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. அதில் முகத்தில் ரத்த காயங்களுடன், கையில் தாலி வைத்துக்கொண்டு பிரதீப் ரங்கநாதன் தோன்றுகிறார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, சாய் அபயங்கர் இசை அமைக்கிறார். நவீன் யெர்னேனி, ஒய்.ரவிசங்கர் இணைந்து தயாரிக்கின்றனர். பரத் விக்ரமன் எடிட்டிங் செய்கிறார்.

Tags : Pradeep Ranganathan ,Mamita ,Chennai ,Ravi Mohan ,Sarathkumar ,
× RELATED இரண்டாவது படத்திலேயே இயக்குனரான நடிகை