×

ஜி.வி. பிரகாஷுடன் இணைந்தார் கயாடு லோஹர்

சென்னை: ஜி.வி.பிரகாஷ் – கயாடு லோஹர் நடிப்பில் உருவாகியுள்ள ‘இம்மார்ட்டல்’ (Immortal) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டுள்ளது படக்குழு. ‘கிங்ஸ்டன்’ படத்துக்குப் பிறகு, தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஜி.வி.பிரகாஷ். தற்போது அவர் நடித்த புதிய படம் ஒன்று முடிக்கப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இரண்டுமே இளைஞர்களை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

‘இம்மார்ட்டல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஏகே. பிலிம் பேக்டரி சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், கயாடு லோஹர் இணைந்து நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக அருண் ராதாகிருஷ்ணன், இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளனர்.

Tags : G.V. Prakash ,Gayadu Lohar ,Chennai ,
× RELATED திடீரென்று கிளாமருக்கு மாறிய ரஜிஷா விஜயன்