×

சிம்பு, அசோக் செல்வனுக்கு கமல்ஹாசன் திடீர் உத்தரவு

சென்னை: ‘தக் லைஃப்’ படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் தற்போது இப்படத்தின் புரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக துவங்கி நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை வாங்கிய நெட்பிளிக்ஸ் நிறுவனம் கமலை பேட்டி எடுக்க சென்னைக்கு வந்துள்ளார்களாம். அப்போது கமல், ‘தக் லைஃப்’ படத்தில் நடித்த சிம்பு, அசோக் செல்வன், அபிராமி, திரிஷா ஆகியோரையும் அந்த பேட்டி கொடுக்கும்படி கூறியதாக தகவல்கள் வருகின்றன. அதேபோல் நெட்பிளிக்சிடமும் நான் மட்டும் பேட்டி தரமாட்டேன். மற்ற கலைஞர்களும் பேட்டி தருவார்கள் என கறாராக கூறிவிட்டாராம்.

‘தக் லைஃப்’ என் படம் மட்டும் கிடையாது, எங்களுடைய படம். எனவே அனைவரும் புரோமோஷனில் கலந்துகொள்ளவேண்டும் என கமல் அதிரடியாக கூறியுள்ளார். கமல் இவ்வாறு கூறியதை கேட்டு அசோக் செல்வன், சிம்பு ஆகியோர் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்களாம். படத்தில் மட்டுமல்லாமல் புரோமோஷனிலும் கமல் அனைவரையும் சமமாக நடத்துவது படக்குழுவினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்நிலையில் இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள், கமலின் இந்த மனசுக்காகவே இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறவேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.

Tags : Kamal Haasan ,Simbu ,Ashok Selvan ,Chennai ,Netflix ,Kamal ,
× RELATED இரண்டாவது படத்திலேயே இயக்குனரான நடிகை