
சென்னை: சந்தானம் நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ என்ற படம் வரும் 16ம் தேதி ரிலீசாகிறது. இதை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது சிம்பு பேசியதாவது: என்னிடம் பலர், ‘எல்லா இடத்திலும் சந்தானம் உங்களை பற்றி புகழ்ந்து பேசுகிறாரே, ஏன்?’ என்று கேட்பார்கள். அதுதான் சந்தானத்தின் கேரக்டர். ஒருவருக்கு நீங்கள் உதவி செய்யலாம். பிரதிபலன் பார்க்காமல் செய்ய வேண்டும். சிலர் நமது உதவியை நினைவில் வைத்து மரியாதை தருவார்கள். சிலர் மதிக்கவே மாட்டார்கள். சந்தானத்தின் காமெடியை ரொம்ப மிஸ் பண்றோம்.
ஹீரோ என்பதை தாண்டி என்னுடனும், ஆர்யாவுடனும் அல்லது அவருக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களுடன் அவர் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். அதற்கு ஒரு ஆரம்பமாக எனது 49வது படம் இருக்கும். அவர் மீண்டும் காமெடி செய்வாரா என்று சிலர் கேட்டனர். நான் போன் செய்தால் கண்டிப்பாக அவர் வந்துவிடுவார். காரணம், எங்களுக்குள் இருக்கும் நட்பு அப்படி. இனிமேல் கலகலப்பான சந்தானத்தை பல படங்களில் பார்க்கலாம் என்றார் சிம்பு. சந்தானம் பேசும்போது, ‘சிம்பு இல்லாவிட்டால் நானில்லை. இந்த படத்தை தயாரித்த ஆர்யாவுக்கு நன்றி’ என்றார்.
