×

மரகதமலையில் டிராகன், புலி, கொரில்லா

சென்னை: எல்.ஜி. மூவிஸ் சார்பில் எஸ்.லதா தயாரிக்கும் படம் ‘மரகதமலை’. குழந்தைகளை கவரும் வகையில் பல குழந்தை நட்சத்திரங்கள் மற்றும் புலி, யானை, டிராகன், கொரில்லா, பாம்பு, குதிரை என படம் அட்டகாசமாக புதுமையான ஃபேண்டஸி டிராமாவாக உருவாகி வருகிறது. இதற்கான விஎப்எக்ஸ் வேலைகள் இரவு பகலென நடந்து வருகிறது.

படத்தை இம்மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளனர். எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் எஸ்.லதா. இப்படத்தில் மாஸ்டர் சஷாந்த், அரிமா, மஹித்ரா, கலைக்கோ, நடிக்கும் இப்படத்தில் கதாநாயகனாக சந்தோஷ் பிரதாப், கதாநாயகியாக தீப்ஷிக்ஹா மற்றும் முதன்மை கதாபாத்திரத்தில் தம்பி ராமையா, ஜெகன், சம்பத் ராம், வில்லானாக டெம்பர் வம்சி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Tags : Maragathamalai ,Chennai ,LG Movies' ,S. Latha ,
× RELATED தமன்னா நடிக்கும்‘ஓ ரோமியோ’