
சினிமாவில் ஒரு சில கதாபாத்திரங்கள் நமக்கு பொழுபோக்காகவும் , ஒரு சில கதாபாத்திரங்கள் பிரமிப்பையும் ஏற்படுத்தும் . அனால் ரெட்ரோ படத்தில் பூஜா ஹெக்டே ருக்கு கதாபாத்திரத்தில் நடித்திருப்பது நமக்கு சிறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ருக்கு கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது. முதல் காட்சியிலிருந்தே பூஜா ஹெக்டே ஒரு நடிகையாக ஒரு கதாபாத்திரத்தை வேடமிடுவது போல் இல்லாமல் நமக்கு தெரிந்த ஒருவரைப் போல் உணர வைக்கும் வகையிலும், அடுத்த வீட்டுப் பெண் போல நம்மை கவர்கிறார் .ருக்கு கதாபாத்திரம் இப்படத்தில் அதிகம் பேசுவதில்லை.

ஆனால் அவரது மௌனங்களின் மூலம் முழு உணர்ச்சிகளின் அளவைக் காட்டுகிறார். இந்த நடிப்பை தனித்து நிற்க வைப்பது அதன் எளிமை மட்டுமல்ல, அதன் ஆழமும் கூட. வலி, நம்பிக்கை, காதல் போன்றவற்றை அவரது கண்கள் வெளிப்படுத்துகின்றன. பூஜாவால் உயிர்ப்பிக்கப்பட்ட ருக்கு கதாபாத்திரம் “வலிமையில் மென்மை” என்பதன் காட்சி உருவமாகிறது. பூஜாவின் இந்த கதாபாத்திரம் அவரது முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் தனித்துவமான வகையிலும்,ஆழமாக உள்வாங்கி நடித்திருக்கிறார்.
தற்போது சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பூஜா ஹெக்டே கதாபாத்திர காட்சிகள் மற்றும் கன்னிமா பாடல் நடனம் என ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் .மேலும் இவரது அடுத்த படங்களான ஜன நாயகன், கூலி, காஞ்சனா 4 போன்ற படங்களுக்கு ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
