×

பைக் டாக்ஸிகளுக்கு தடை: ஏஐடியுசி வலியுறுத்தல்

சென்னை: பைக் டாக்ஸிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என ஏஐடியுசியின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சென்னை, சைதாப்பேட்டையில் ஏஐடியுசி தென்சென்னை மாவட்டம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. அதில் பைக் டாக்ஸிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இதுதொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘ஒன்றிய பாஜ அரசு தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. அந்த வகையில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்ட தொகுப்புகள் தொழிலாளர் நலனுக்கு முற்றிலும் விரோதமாக உள்ளது. அதை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். சாமானிய மக்கள் உள்பட அனைவரும் பாதிப்புக்குள்ளாகும் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களின் வருமானத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பைக் டாக்ஸிகளுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்றனர்….

The post பைக் டாக்ஸிகளுக்கு தடை: ஏஐடியுசி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : AITUC ,Chennai ,AIDUC Densen ,Saithapetta ,AIDUC ,Dinakaran ,
× RELATED போக்குவரத்து தொழிலாளர் – போலீசார்...