×

மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல் லண்டன் பக்கிங்காம் அரண்மனை வந்தடைந்தது

லண்டன்: மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல் லண்டன் பக்கிங்காம் அரண்மனை வந்தடைந்தது. அரண்மையில் 24 மணிநேரம் உடல் வைக்கப்படுகிறது. பிறகு வெஸ்ட்மின்ஸ்டரில் மக்கள் அஞ்சலிக்காக 3 நாட்கள் வைக்கப்பட உள்ளது.இங்கிலாந்தின் ராணி 2-ம் எலிசபெத் 96வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் பால்மோரல் மாளிகையில் இருந்து  கடந்த 11-ம் தேதி ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரச குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.இந்நிலையில் ராணி எலிசபெத்தின் உடல் லண்டன் பக்கிங்காம் அரண்மனைக்கு வந்தடைந்துள்ளது. அரண்மையில் 24 மணிநேரம் உடல் வைக்கப்படுகிறது. இன்று பிற்பகலில் ராணியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டு பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுகிறது. பிறகு வெஸ்ட்மின்ஸ்டரில் மக்கள் அஞ்சலிக்காக 3 நாட்கள் வைக்கப்பட உள்ளது. எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனை வந்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த குவிந்துள்ளனர்….

The post மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல் லண்டன் பக்கிங்காம் அரண்மனை வந்தடைந்தது appeared first on Dinakaran.

Tags : Queen Elizabeth ,London's Buckingham Palace ,London ,Buckingham Palace ,
× RELATED லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற...