
மும்பை: சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி வெளியிடுவதும், பிறகு மன்னிப்பு கேட்பதும் இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப்புக்கு வழக்கம். திரைப்பட விவகாரங்களில் சென்சார் போர்டு குறுக்கிடுவதை கடுமையாக எதிர்க்கும் அவர், இந்தியாவில் ரிலீசாகி இருக்கும் ‘சின்னர்ஸ்’ என்ற ஹாலிவுட் படத்தை பார்த்துவிட்டு, மீண்டும் சென்சார் போர்டை கடுமையாக எதிர்த்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஒவ்வொரு படத்திலும் புகை பிடித்தல், மது உள்பட போதை பொருட்களை பயன்படுத்தும்போது, அதுகுறித்த எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறுவது, ‘சின்னர்ஸ்’ என்ற படத்தின் இயக்குனர் உருவாக்கும் டென்ஷனுடன் பயணிக்க முடியாதபடி, படத்தை பார்க்கும் ரசிகர்களின் எண்ணத்தை கெடுக்கிறது. எதற்காக இந்த வாசகங்களை இடம்பெற செய்ய வேண்டும்? அது தேவையற்றது.
