- சென்னை
- ஸ்டுடியோ மூவிங் டர்டில்
- ஸ்ரீகிரிஷ் படங்கள்
- ராஜேந்திர பிரசாத்
- நவீன்
- எம்.கே.சாம்பசிவம்
- தரணிதரன்
- பரிமள குலோத்துங்கன்
- நா. யுவராஜ்
- கபில் வேலவன்
- தக்ஷா
- அர்ஜுன் தேவ்
- சரவணன்
- குணவந்தன்
- சம்பசிவம்
- ராம்…

சென்னை: ஸ்டுடியோ மூவிங் டர்டில், ஸ்ரீகிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் ராஜேந்திர பிரசாத், நவீன், மு.கி.சாம்பசிவம், தரணிதரன், பரிமளா குலோத்துங்கன், நா.யுவராஜ் இணைந்து தயாரித்துள்ள படம், ‘மனிதர்கள்’. இதில் கபில் வேலவன், தக்ஷா, அர்ஜூன் தேவ், சரவணன், குணவந்தன், சாம்பசிவம் நடித்துள்ளனர். இராம் இந்திரா எழுதி இயக்கியுள்ளார். அஜய் ஆபிரஹாம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்ய, அனிலேஷ் எல்.மேத்யூ இசை அமைத்துள்ளார். தின்சா படத்தொகுப்பு செய்ய, மகேந்திரன் பாண்டியன் அரங்குகள் அமைத்துள்ளார்.
கார்த்திக் நேத்தா பாடல்கள் எழுதியுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, சந்தோஷ் பிரதாப், சி.வி.குமார் ஆகியோர் இணைந்த வெளியிட்டனர். படம் குறித்து இராம் இந்திரா கூறுகையில், ‘இது கிரவுட் ஃபண்டிங் முறையில் உருவான படமாகும். மனிதனின் மனம் நொடிக்கு நொடி மாறும். இரவில் மது அருந்தும் 6 நண்பர்களுக்கு இடையே, அடுத்த 6 மணி நேரத்தில் ஏற்படும் பிரச்னையை சொல்லும் சஸ்பென்ஸ் திரில்லர் படமான இதன் படப்பிடிப்பு, திண்டுக்கல் கிராமம் ஒன்றில் இரவில் மட்டுமே நடந்தது. பெண்களே நடிக்காத வில்லேஜ் ரோட் மூவி இது’ என்றார்.
