×

காதலருடன் நடிப்பதால் பாக்யஸ்ரீயை ராஷ்மிகா கண்காணிக்கிறாரா?

ஐதராபாத்: காதலர் விஜய் தேவரகொண்டாவுடன் பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பதால் இருவரையும் ராஷ்மிகா கண்காணிப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா காதலித்து வருகிறார்கள். இந்நிலையில் ‘கிங்டம்’ என்ற படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் உடன் சேர்ந்து விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கும் பாக்யஸ்ரீக்கும் இடையே நெருக்கமான காட்சிகள் இருக்கிறதாம்.

இதனால் படக்குழுவில் உள்ள சிலரிடம் இருவரையும் கண்காணிக்கும்படி ராஷ்மிகா தரப்பில் கூறியிருப்பதாக தகவல் பரவியுள்ளது. தனது காதலர் அழகான பெண்ணுடன் நடிக்கும்போது, இதுபோல் பிரச்னை ஏற்படுவது சகஜம்தான் என சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ராஷ்மிகா தற்போது இந்தி படமொன்றில் நடித்து வருகிறார். பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுடன் ‘காந்தா’ படத்திலும் நடிக்கிறார்.

Tags : Rashmika ,Bakhyasri ,Hyderabad ,Baqyasri Porz ,Valentine ,Vijay Devarkonda ,Vijay Devarakonda ,Baqyasree Porce ,
× RELATED ஜமா பாரி இளவழகன் ஜோடியாக ரம்யா ரங்கநாதன்