×

திருமழிசையில்அடிப்படை வசதிகள் நிறைவேற்ற 15 கவுன்சிலர்களுக்கும் தலா ரூ.10 லட்சம்: நிதி ஒதுக்கீடு கோரி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு  பேரூராட்சித் தலைவர் உ.வடிவேலு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜெ.மகாதேவன் முன்னிலை வகித்தார்.  பேரூராட்சி செயல் அலுவலர் தா.மாலா அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் வி.விஜயலட்சுமி, கஸ்தூரி, எஸ்.ஜீவா, எஸ்.அனிதா, மஞ்சுளா, ஆர்.ராஜேஷ், எஸ்.பிரியா, வீ.வேணுகோபால், ட்டி.எம்.ரமேஷ், வி.ஜெயசுதா, ஆர்.பிரதீப், சி.வேலு, ஜெ.லதா, இளநிலை உதவியாளர் ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில், திருமழிசை பேருந்து நிலையம் அருகே ரூ. 2 கோடி மதிப்பீட்டில் கடைகள் கட்டவும், காந்தி மார்க்கெட்டில் அமைந்துள்ள பேருராட்சிக்கு சொந்தமான கடைகளை பழுது நீக்கம் செய்து புதுப்பிக்க ரூ.50 லட்சம்  நிதி ஒதுக்கீடு செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருமழிசை பேரூராட்சியின் எல்லையில் செயல்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்ட சேமிப்பு லைன்களில் அடிக்கடி அடைப்புகள் ஏற்பட்டு அதனை சீர் செய்ய ஆள் நுழைவு தொட்டிகளில் ஜெர் ராடிங் மெஷின் மூலம் பழுது  நீக்கம் செய்ய பேரூராட்சியில் வாகனம் இல்லாத காரணத்தால் தனியார் வாகனம் மூலம் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.இதனால் காலதாமதம் ஏற்பட்டு சாலைகளில் கழிவு நீர் வழிந்தோடி சுகாதாரக் கேடு ஏற்படும் நிலை தொடர்ந்து வருவதால், இந்த திட்டம் எந்த வித இடையூறும் இல்லாத வகையில் செயல்படுத்திட ஜெர் ராடிங் வாகனங்களை வாங்க போதிய நிதி ஆதாரம் இல்லாத நிலையில் இயந்திரங்கள் வாங்க டெசில்டிங் மெஷின் 15 லட்சத்திற்கும்,  ஜெட்டிங் கம் வேக்கம் சக்சன் மெஷின் 65 லட்சத்திற்கும் ஏதேனும் ஒரு திட்டத்தில் மானியம் அனுமதிக்க கோரி   பேரூராட்சிகளின் ஆணையரிடம் கருத்துரு சமர்ப்பிக்கவும், தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பேரூராட்சிக்குட்பட்ட 4 வது வார்டு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் ஒப்புதலுடன் 8 மின்கலன்கள் மூலம் இயங்கும் வாகனங்கள் கொள்ளமுதல் செய்ய 85 சதவிகிதம் மானியத்துடனும், பேரூராட்சி பங்குத்தொகை 15 சதவிகிதம் வழங்கவும், 9 வது வார்டில் கலைநகர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேட்டுத்தாங்கல் குளத்தினை மேம்படு்திட ரூ. 17.20 லட்சம் மானியத்துடன், பேரூராட்சி பங்குத் தொகையாக ரூ. 44.80 லட்சம் வழங்கவும், பொது மக்களின் அத்தியாவசியத் தேவைகளான குடிநீர் பிரச்சினையை போக்கவும், தார்சாலைகள் மற்றும் சிமென்ட் சாலைகள் அமைக்கவும், மின்விளக்குகள் பொருத்தவும், மழை நீர் வடிகால்வாய்கள் அமைக்கவும், பேரூராட்சி பொது நிதியிலிருந்து 15 கவுன்சிலர்களுக்கும் தலா  ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி தமிழக அரசை கேட்டுக்கொண்டும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது….

The post திருமழிசையில்அடிப்படை வசதிகள் நிறைவேற்ற 15 கவுன்சிலர்களுக்கும் தலா ரூ.10 லட்சம்: நிதி ஒதுக்கீடு கோரி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Thirumazhisai ,Thiruvallur ,Thiruvallur District ,Tirumazhisai ,Municipal Council Chairman ,U. Vadivelu ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சி தலைவர் உயிரிழப்பு