×

பறவைக் காய்ச்சலை மாநில பேரிடராக அறிவித்தது கேரள அரசு: 12,000-க்கும் மேற்பட்ட வாத்துக்கள் இறப்பு

திருவனந்தபுரம்: பறவைக் காய்ச்சலை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்ததுள்ளது. கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் தீவிரமானதால் கேரள அரசு அறிவித்துள்ளது. கோட்டயத்தில் நீண்டூர் என்ற இடத்தில் ஒரு வாத்துப் பண்ணையில் நோய் பரவியிருப்பதாக அதிகாரிகள் கண்டறிந்தனர். பறவை காய்ச்சலால் இதுவரை 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாத்துகள் இறந்துள்ளன. இந்த நோய் இன்புளூயன்ஸா-ஏ வகை வைரஸால் ஏற்படுகிறது. இந்த வைரஸில் பல வகைகள் உள்ளன. இவற்றில் எச்5-என்8 வைரஸ் 2 மாவட்டங்களிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை மனிதர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது. இருப்பினும் இதுவரை மனிதர்களுக்கு பரவவில்லை. எனவே கவலைப்பட தேவையில்லை. இதேபோல ஆலப்புழா மாவட்டத்தின் குட்டநாடு மண்டலத்தில் உள்ள சில பண்ணைகளிலும் பறவைக் காய்ச்சல் தாக்கி உள்ளது. போபாலில் செயல்படும் பறவை நோய்கள் ஆராய்ச்சி மையத்திற்கு மாதிரிகள் அனுப்பி, பறவைக் காய்ச்சலின் பரவல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. கண்காணிப்பாளராக தலைமை கால்நடை அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். நோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் ஒரு கி.மீட்டர் சுற்றளவில் கோழிகள், வாத்துகள், அலங்கார பறவைகள் உள்பட 36 ஆயிரம் பறவைகள் கொல்லப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும். பறவை காய்ச்சல் பரவினாலும் வெளி மாநிலங்களில் இருந்து கோழி, வாத்துகள் கொண்டுவர தடை விதிப்பது குறித்து தற்போது ஆலோசிக்கப்படவில்லை. நோய் அறியப்பட்ட பகுதியில் பறவைப் பண்ணை வைத்திருப்பவர்கள், வளர்ப்பு பறவைகளை அழித்து நோய்ப்பரவலை தடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர் என கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ராஜூ கூறினார். வளர்ப்பு பறவைகளான கோழிகள், வான்கோழிகள், வாத்துகள் உள்ளிட்டவற்றின் கழிவுகள், மூக்கு, வாய், கண் இவற்றின் வழியாக பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தும் எச்.5என்8 வைரஸ் பரவுவதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு, கேரளாவில் கடந்த 2016-ம் ஆண்டு பறவைக் காய்ச்சல் பரவியது குறிப்பிடத்தக்கது. கேராளாவில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் காரணமாக, அம்மாநிலத்தில் இருந்து கோழி, வாத்து போன்ற பறவைகளை தமிழகத்திற்குள் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பறவைக்காய்ச்சல் இரு மாவட்டங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் கோழிப்பண்ணைகளை தொடர்ந்து கண்காணிக்கும்படி கூறி கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திருப்பூர். கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும் கேரளாவில் இருந்து கோழி உள்ளிட்ட பறவையினங்கள் மற்றும் முட்டை,. கோழி தீவனம், பறவையின வளர்ப்பிடங்களில் பயன்படுத்தப்படும் உரங்கள் போன்றவற்றை ஏற்றி வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது….

The post பறவைக் காய்ச்சலை மாநில பேரிடராக அறிவித்தது கேரள அரசு: 12,000-க்கும் மேற்பட்ட வாத்துக்கள் இறப்பு appeared first on Dinakaran.

Tags : Government of Kerala ,Thiruvananthapuram ,Kottayam, Alapupha districts ,Kerala ,Dinakaraan ,
× RELATED ஓடும் பஸ்சிலிருந்து கீழே விழ இருந்த வாலிபரை காப்பாற்றிய கண்டக்டர்